தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம்.!
வெப்பச் சலனத்தால் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலையின் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்தது. இந்நிலையில், இன்று (புதன்கிழமை) மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின்சில பகுதிகளில் மிதமான மழை பெய்யலாம்.
மேலும், பனிப்பொழிவு 2 வாரங்களுக்கு நீடிக்கும். அதன் பிறகே கோடைக்காலம் தொடங்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Comments