மீனவர்களுக்கு பிரத்யேக வானொலி தொடக்கம்: வானொலி அறிவிப்பாளர் தகவல்.!
crazynewschannel
Feb 5, 2017
1 min read
உலகிலேயே மீனவர்களுக்கு என பிரத்யேக வானொலி தொடங்கப்பட்டுள்ளது என்று வானொலி அறிவிப்பாளர் பி.ஹெச் அப்துல் ஹமீது தெரிவித்துள்ளார்.ராமேஸ்வரம் பாம்பனில் கடல் ஓசை சமுதாய வானொலியின் துவக்க விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இலங்கை வானொலி அறிவிப்பாளர் பி.ஹெச்.அப்துல் ஹமீது கலந்து கொண்டார்.கலந்து கொண்டு அவர் நிகழ்ச்சியில் பேசியதாவது: நீங்கள் கேட்டவை நிகழ்ச்சிகளை மீனவர்கள் விரும்பி கேட்பார்கள். மீனவர்களின் வாழ்க்கையை வானொலியில் தெரிவிப்பதற்காக நானும் மீனவர்களின் படகுகளில் சென்று நடுக்கடலில் மீனவர்கள் பாடும் பாடல்களை பதிவு செய்துள்ளேன்.மீனவர்களுக்காக வானொலி இன்று தொடங்கப்பட்டது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. வானொலி என்பது ஒரு தகவல் சாதனம். தற்போது உள்ள வானொலிகள் வெறும் பாட்டுப் பெட்டிகளாக உள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்
Kommentare