ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து - தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே.நகரில் வரும் 12 ஆம் தேதி தேர்தல் நடைபெற இருந்தது. ஆனால், பணபட்டுவாடா காரணமாக பல புகார்கள் எழுந்த நிலையில் தேர்தல் ரத்து செய்யப்படுவதாக டெல்லியில் நடந்த ஆலோசனைக்கு பிறகு தேர்தல் ஆணையம் அறிவித்ததுள்ளது.
இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள 29 பக்கங்கள் கொண்ட அறிக்கையில், ஆர்.கே.நகர் தொகுதியில் பல கோடி பணப்பட்டுவாடா நடைபெற்றுள்ளதாகவும், இதனால், நேர்மையாகவும், நியாயமாகவும் தேர்தல் நடைபெறும் சூழல் இல்லாததால், இந்த தேர்தலை ரத்து செய்வதாக தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், அரசியல் சட்டப்பிரிவு 324 கீழ் தேர்தல் ரத்து செய்யப்படுவதாகவும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 21ன் கீழ் தேர்தலை ரத்து செய்ய தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இதனைதொடர்ந்து, தேர்தல் நடைபெற நியாமான சூழல் உருவாகும் போது தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
留言