ஆர்.கே.நகரில் களமிறங்குகிறார் நடிகை கவுதமி?
- crazynewschannel
- Mar 15, 2017
- 1 min read

ஆர்.கே.நகர் தொகுதியில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் பாஜக சார்பில் நடிகை கௌதமி களமிறங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலமானதால், அவர் வென்ற ஆர்.கே.நகர் தொகுதி காலியாகவே உள்ளது. இதனையடுத்து ஏப்ரல் 12ம் தேதி அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஜெயலலிதா மர்ம மரணம் குறித்த உண்மையை கண்டறிய விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் முதன் முதலில் கோரிக்கை வைத்த நடிகை கௌதமி பாரதீய ஜனதா சார்பாக நிறுத்தப்படலாம் அல்லது இசையமைப்பாளர் கங்கை அமரன் வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
தே.மு.தி.க சார்பாக வடசென்னை மா.செ. மதிவாணன் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், அ.தி.மு.க சார்பில் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.அதே சமயம் அவர் போட்டியிடவில்லை என்றால் எம்.ஜி.ஆர். வளர்ப்பு மகள் சுதாவை களமிறக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
திமுக சார்பில் களமிறங்கப்போவது யார் என்பது குறித்து இன்று மாலை அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Comments