சென்னை சூப்பர் கிங்ஸ் அணியாகவே மாறிய புனே!!கடைசி ஓவர் வரை பரபரப்பு…
![](https://static.wixstatic.com/media/d572ed_b75143b6fa894370b678ab96846d70c4~mv2.jpg/v1/fill/w_920,h_250,al_c,q_80,enc_auto/d572ed_b75143b6fa894370b678ab96846d70c4~mv2.jpg)
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் புனே அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றுள்ளது.
ஐ.பி.எல் பத்தாவது சீசனில் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் புனே அணியும் பலப்பரீட்சை செய்தன.
இதில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார், இதனையடுத்து களமிறங்கிய புனே அணிக்கு தொடக்கம் கொடுத்த ரஹானே 32 பந்துகளில் 38, திரிபதி 31க்கு 45 ரன்களை குவித்து சிறப்பான துவக்கம் கொடுத்தனர். இவர்கள் இருவரும் கேவி சர்மாவின் சுழலில் சிக்கி விக்கெட்டை பறிகொடுத்தனர்.
அடுத்தடுத்ததாக களமிறங்கிய ஸ்மித்(17),தோனி(7), ஸ்டோக்ஸ்(17), மனோஜ் திவாரி(22) ரன்களும் எடுத்து வெளியேற 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்த புனே அணி 160 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எட்டக்கூடிய இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அந்த அணியின் துவக்க வீரர் பாதீவ் பட்டேல் 33 ரன்களும், ஜாஸ் பட்லர் 17 ரன்களும் எடுத்து சுமாரான துவக்கம் கொடுத்தனர்.
அதனை தொடர்ந்து களமிறங்கிய ரானா(3), கர்ண் சர்மா(11),பொலார்டு(9),ஹர்திக் பாண்டியா(13) ரன்களில் அடுத்தடுத்து வெளியேறினர்.
ஒருபக்கம் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் தனது பொறுப்பை உணர்ந்து நிதானமாக விளையாடிய அந்த அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், கடைசி ஓவரின் 4வது பந்தில் உனந்கட்டின் அபார கேட்ச்சால் விக்கெட்டை பறிகொடுத்தார், கடைசி 2 பந்துகளுக்கு 11 ரன்கள் தேவை என்ற நிலையில் கடைசி பந்தில் ஹர்பஜன் ஒரு சிக்ஸர் மட்டும் அடிக்கவே புனே அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றுள்ளது.
Comments