‘‘மக்கள் விரும்பியதே ஜனாதிபதி ஆட்சிதான்’’ கமெண்ட்ஸ், கருத்துக்கணிப்பு, இன்னும் பல..!
![](https://static.wixstatic.com/media/d572ed_5e00fe108b144959972b25b9bf9b1545~mv2.jpg/v1/fill/w_960,h_250,al_c,q_80,enc_auto/d572ed_5e00fe108b144959972b25b9bf9b1545~mv2.jpg)
தமிழகத்தில் நிலவிவரும் உட்கட்சி பூசல், முதல்வரின் பெரும்பான்மை வாக்கெடுப்பு, பேரவையில் ரகளை மற்றும் ஆளுநரின் காலதாமதம் உள்ளிட்டவைகளால் தமிழகமே கதிகலங்கிபோயிருக்கிறது என்றே சொல்லலாம்.
இந்த அசாதாரண சூழ்நிலையில், எந்த கட்சியின் ஆட்சியும் வேண்டாம் என்று தமிழக மக்கள் விரும்புவதாகவும், அடுத்த தேர்தலை எதிர்நோக்கி தற்போது ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தலாம் எனவும் சமூகவலைத்தளங்களில் வரும் கமெண்ட்ஸ் மற்றும் பதிவுகளே சாட்சி.
மேலும், இந்த சம்பவங்கள் தொடர்பாக பல்வேறு கருத்துக்கணிப்புக்களை சில செய்தி நிறுவனங்கள் நடத்தியதில், பெரும்பாலும் ஆட்சியை கலைத்துவிட்டு ஜனாதிபதி ஆட்சியே விரும்புவதாகவே செய்திகள் தெரிவிக்கின்றன.
இன்னும் சொல்லப்போனால், தகவல் பறிமாற்றத்தில் புரட்சியை ஏற்படுத்தும் வாட்ஸ்அப் குழுக்களிலும் தற்போது உள்ள அதிமுகவின் ஆட்சிக்கு எதிராகவே மீம்ஸ் உள்ளிட்ட எதிர்ப்பு தெரிவிக்கும் புகைப்படங்களும் செய்திகளும் பரவி வருகிறது.
நேற்று நடந்த சட்டசபை ரகளையை அடுத்து, தமிழகத்தில் மேலும் கலவரங்கள், போராட்டங்கள் வெடிக்கும் சூழலும் தற்போது ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments