விண்ணில் சீறிப்பாய்ந்தது பி.எஸ்.எல்.வி ராக்கெட்! 104 செயற்கைகோளுடன் இந்தியா உலக சாதனை!!
crazynewschannel
Feb 15, 2017
1 min read
7 நாடுகளின் 104 செயற்கை கோள்களுடன் இன்று ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி சி37 ராக்கெட் விண்ணில் சீறிப்பாய்ந்தது. இது வரை வேறு எந்த நாடுகளும் இவ்வளவு எண்ணிக்கையுடனான செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே இது உலக சாதனையாக கருதப்படுகிறது.
இஸ்ரோ உலக அளவில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. சந்த்ராயன் நமது மிகப்பெரிய சாதனை செயற்கை கோளாகும். உலக நாடுகளுக்கு போட்டியிடும் அளவில் நமது இஸ்ரோவின் விஞ்ஞானிகளின் செயல்பாடுகள் மற்றும் தொழில்நுட்ப அறிவு அமைந்துள்ளது.
உலக நாடுகள் இந்தியாவின் மீது விண்வெளித்துறையில் கவனம் செலுத்தும் அளவுக்கு இந்தியா வலிமை பெற்று வருகிறது. இது இந்தியாவின் பெருமைக்கு எடுத்துக்காட்டாகும்.
Comments