”எங் மங் சங்” கில் அந்த ஹீரோயின் இருக்கணும்- அடம் பிடித்த பிரபுதேவா?
![](https://static.wixstatic.com/media/d572ed_cd1384d3d594413490843fa8d9fcf7d2~mv2.jpg/v1/fill/w_620,h_350,al_c,q_80,enc_auto/d572ed_cd1384d3d594413490843fa8d9fcf7d2~mv2.jpg)
முண்டாசுப்பட்டி, இன்று நேற்று நாளை ஆகிய படங்களில் அசிஸ்டன்ட் இயக்குநராக இருந்த எம்.எஸ்.அர்ஜுன் இயக்க, பிரபுதேவா ஹீரோவாக நடிக்க ஒரு படம் பூஜை போடப்பட்டுள்ளது.
தேவி படத்துக்கு பின் பிரபுதேவா நடிக்கப்போகும் தமிழ் நேரடி படம் இது. இதில் இவர் குங்பு மாஸ்டராக நடிப்பதால் படத்துக்கு, ”எங் மங் சங்” என்று டைட்டில் வைத்துள்ளனர்.
இதில் இயக்குனர் தங்கர் பச்சான் நடிக்கப்போகிறார். அத்தோடு ஆர்.ஜே.பாலாஜி, காலகேயா பிரபாகர், சித்ரா லட்சுமணன், கும்கி அஸ்வின் போன்று பலரும் நடித்தாலும், பிரபுதேவா இயக்குனரிடம் கதை கேட்டுவிட்டு ஒருவரை பிக்ஸ் செய்ய சொன்னாராம்.
அதாங்க ஹீரோயினுக்கு…தெரிஞ்சிடுச்சா? தமன்னா தான் ஹீரோயின் என்று கண்டிஷன் போட்டவுடன், ஓகே சொன்னதால், படம் பூஜை நடந்து உள்ளது.
பல வருடங்களுக்கு பின் பிரபுதேவா தேவி படம் மூலம் தமிழுக்கு நடிகராக ரீஎன்ட்ரி. இவருக்கு ஹீரோயின் தமன்னா. போதாதா? இரண்டு பேருக்கும் பத்திக்கிச்சாம்.
குரு போல என்று தொடங்கிய நட்பு…இன்றைக்கு காதலாகி கசிந்துருகி விட்டதாம். ஷூட்டிங் ஸ்பாட்டில் தமன்னா வாந்தி என்று கூட வதந்திகள். இந்த வாந்தியால் ஷூட்டிங் கூட கேன்சலானதாம்.
இப்படி ஒரு வதந்தி பரவி வரும் வேலையில், பிரபுதேவா மாஸ்டர் தன்னுடைய எல்லா படங்களிலும் தமன்னாவையே ஹீரோயினாக்க சொல்லி இருக்கிறாராம். தமன்னாவோ, சம்பளத்தை வேறு உயர்த்தி விட்டாராம்.
Comments