பவுர்ஃபுல் மேனாக மாறிய பாண்டியா… மும்பையில் பிரகாசிக்க தவறியது சூரியன் !!
![](https://static.wixstatic.com/media/d572ed_03e1b822e0d649b9b2333395bba01fe9~mv2.jpg/v1/fill/w_920,h_250,al_c,q_80,enc_auto/d572ed_03e1b822e0d649b9b2333395bba01fe9~mv2.jpg)
ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
ஐ.பி.எல் பத்தாவது சீசனில் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் மும்பை அணி ஹதராபாத் அணியை எதிர்கொண்டது.
![](https://static.wixstatic.com/media/d572ed_364495360e4448e8b3027b6a70d13eec~mv2.png/v1/fill/w_544,h_370,al_c,q_85,enc_auto/d572ed_364495360e4448e8b3027b6a70d13eec~mv2.png)
இதில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரோஹித் சர்மா டாஸ் வென்றதை தொடர்ந்து களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு அந்த அணியின் துவக்க வீரர்களான வார்னர் 49 ரன்களும், தவான் 48 ரன்களும் எடுத்து சிறப்பான துவக்கம் கொடுத்தாலும், அவர்களை தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறவே 20 ஓவரில் 8 விக்கெட்டை இழந்த ஹைதராபாத் அணி 158 ரன்கள் எடுத்தது.
![](https://static.wixstatic.com/media/d572ed_c92c0f28038a40fc8ee1904ccbf50a0d~mv2.png/v1/fill/w_555,h_306,al_c,q_85,enc_auto/d572ed_c92c0f28038a40fc8ee1904ccbf50a0d~mv2.png)
அதனை தொடர்ந்து 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அந்த அணியின் முண்ணனி வீரர்களான ரோஹித் சர்மா 4 ரன்களிலும், பொலார்டு 11 ரன்களிலும், பட்லர் 14 ரன்களிலும் வெளியேறி ஏமாற்றினாலும், இளம் வீரர்களான பார்தீவ் பட்டேல் 39 ரன்களும், ராணா 45 ரன்களும், க்ரூணல் பாண்டியா 37 ரன்களும் எடுத்து கைகொடுக்க 18.4 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு இலக்கை அடைந்த மும்பை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
Comments