வளரும் நாடென்று வாய்கிழிய பேசுகிறோம்..! இந்திய குழந்தைகள் வறுமையில்..! ஆக்ஸ்ஃபோர்ட் ஆய்வில் அதிர்ச்ச
- crazynewschannel
- Jun 4, 2017
- 1 min read

உடல் ஆரோக்கியம்,கல்வி,வாழ்கின்ற சூழல் இவற்றை அடிப்படையாக வைத்து ஏழ்மை அளவீடு செய்யப்படுகிறது. உடலாரோக்கியத்தில் உணவும், குழந்தைகள் இறப்பு விகிதமும், வாழ்கின்ற சூழலில் உணவு எரிபொருள்,சுகாதாரமான சூழல்,பாதுகாப்பான குடி நீர்,மின்சாரம் உள்ளிட்டவைகளும் அடங்கும். இந்தியாவில் 52.8 கோடி பேர் ஏழைகளாக வாழ்கின்றனர். இந்த நிலை வேதனைக்குரிய குறியீடாகும் என்று ஆக்ஸ்ஃபோர்ட் மனிதவள மேம்பாட்டுத்துறை ஆய்வில் தெரிவித்துள்ளது. இதை மாற்றுவதற்கு சர்வதேச நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி கூறியுள்ளது. இந்தியா வளர்ந்து வரும் நாடாக இருந்தாலும் வறுமையில் வாழும் மக்களை அதிகம் கொண்ட நாடாக உள்ளது. அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியாத நிலையே இன்னும் நீடித்து வருகிறது. அதன்படி உலகில் வாழும் ஏழை மக்களில் மூன்றில் ஒரு பகுதியினர் இந்தியாவில் வசிக்கின்றனர்.2005ம் ஆண்டு உலக வங்கியின் கணக்கெடுப்பின்படி 42சதவீதம் பேர் இந்தியாவில் வறுமையில் வாழ்கின்றனர் என்று உறுதிப்படுத்தியுள்ளது. தாராளமயமாக்கல்,தனியார்மயமாக்கல்,உலகமயமாக்கல் இவைகள் தான் வறுமைக்கு காரணம் என்றும் அந்த ஆய்வு கூறுகிறது. இதில் இந்தியாவில் 31சதவீதம் குழந்தைகள் ஏழ்மையில் வாடுவதாக கூறப்படுகிறது. 103 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வின்படி இந்த தகவலை ஆக்ஸ்போர்ட் மனிதவள மேம்பாட்டுத்துறை தெரிவித்துள்ளது. உலகில் 689மில்லியன் குழந்தைகள் உள்ளனர். இந்தியாவைத் தொடர்ந்து நைஜிரியாவில் 8சதவீதமும்,எத்தியோப்பியாவில் 7 சதவீதமும்,பாகிஸ்தானில் 6சதவீதமும் குழந்தைகள் வறுமையில் வாடுகின்றனர். கடந்த ஆண்டு ஏழை குழந்தைகளுக்கு உதவுவதில் உலக நாடுகள் கவனம் செலுத்த வேண்டும் என்று ஐநா குழந்தைகள் அவசர நிதியகம் (யுனிசெப்) அறிவித்திருந்தது. இந்தியாவில் 6 முதல் 23 மாதங்களில் உள்ள குழந்தைகளில் பத்தில் ஒருவருக்கு மட்டுமே போதிய உணவு கிடைக்கிறது. இதில் கொடுமை என்னவென்றால், இந்த அளவு சஹாரா பாலைவனத்தை ஒட்டியுள்ள நாடுகளின் குழந்தைகளைவிட அதிகம் என்பது இந்திய குழந்தைகளின் நிலை மீது கவலை அளிக்கச் செய்கிறது.
Comments