மத்திய அமைச்சர் மீது காலணி வீசிய சம்பவம் : மு.க.ஸ்டாலின் கண்டனம்.!
டெல்லி ஜே.என்.யூவில் இறந்த தமிழக மாணவரின் உடலுக்கு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று சேலத்தில் அஞ்சலி செலுத்தினார். அப்போது அவர் மீது திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் காலணியை வீசினார்.
இந்த சம்பவத்துக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்:
மத்திய அமைச்சர் மீது காலணி வீசியது ஏற்புடையதல்ல. தமிழகத்தின் பெருமையை சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபடுவதை ஏற்க முடியாது.
இந்த செயல் தமிழர்களின் பண்பாட்டை கெடுக்கும் செயலாக அமைந்துள்ளது. காலணி வீசியவர் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், இனிமேல் இது போன்ற சம்பவம் நடைபெறாமல் தடுக்க டிஜிபி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்தார்.
Comments