கடலில் கச்சா எண்ணெய் கசிவு: மீன்கள் முற்றிலும் அழியும்
crazynewschannel
Feb 4, 2017
1 min read
சென்னை எண்ணூரில் இருந்து கிழக்கு கடற்கரை வரை கச்சா எண்ணெய் படர்ந்துள்ளது. இதனால் கடல்வாழ் உயிரினங்களான மீன்கள், ஆமைகள் கடற்பாசிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
அபூர்வ வகை கடல்வாழ் உயிரினங்கள் அழிந்தால் மீண்டும் பிறப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று கடற்பொறியாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இது பற்றி கடற்பொறியாளர்கள் தெரிவித்ததாவது: மத்திய, மாநில அரசுகள் விரைந்து கடலில் படிந்துள்ள எண்ணெயை முற்றிலும் அகற்றி கடல்நீரை சுத்தப்படுத்த வேண்டும்.
அதன் பின்னர்தான் மீன்கள் அல்லது மற்ற கடல்வாழ் உயிரினங்கள் மீண்டும் உருவாகும் இல்லை என்றால் அனைத்துமே முற்றிலும் அழியநேரிடும். இதனை அரசு சாதாரணமாக கருதாமல் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Comments