புரோட்டா மாஸ்டருக்கு சம்பளம் ரூ 20 ஆயிரம் டிகிரி படித்தவனுக்கு ரூ 7 ஆயிரம் என்ன கொடுமை சார் இது!
சமீபத்தில் பத்திரிக்கை ஒன்றில் வந்த விளம்பரத்தில் அருகருகே மூன்று விளம்பரங்கள் இருந்தது, அதில் ஹோட்டல் விளம்பரம் ஒன்றில் புரோட்டா மாஸ்டர்கள் தேவை என்றும் அவர்களுக்கு மாத சம்பளம் ரூ 18 ஆயிரம் முதல் 20 ஆயிரம் என்றும் விளம்பரப்படுத்தப்பட்டிருந்தது.
அதன் அருகே உள்ள மற்றோர் விளம்பரத்தில் சாப்ட்வேர் கம்பெணி விளம்பரத்தில் பி.இ.,படித்த இளைஞர்கள் தேவை என்றும் மாத சம்பளம் ரூ 7 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை கொடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளனர்.
அதன் அருகே மணமகன் தேவை விளம்பரத்தில், பிசினஸ் செய்கிற மாப்பிள்ளை வேண்டும் சாப்ட்வேர் இன்ஜினியர் தேவை இல்லை என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது. படித்தவர்கள் நிலை, வரும் காலங்களில் கேள்விக் குறியாகி விடும் நிலை ஏற்பட்டுள்ளதையே இது காட்டுகிறது.
Comments