தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா கடிதத்தை ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு அனுப்பி வைத்தார்.
சென்னை ராயப்பேட்டையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் முதல்வராக சசிகலாவை ஒரு மனதாக தேர்ந்தெடுத்துள்ளனர். இதனை ஓ.பன்னீர்செல்வம் முன்மொழிந்தார்.
இதனையடுத்து தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாகவும் அந்த கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளார். அந்த கடிதத்தில் தனிப்பட்ட காரணங்களுக்காக முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.
Comments