சின்னம்மா புகழ்பாடி வந்த பொன்னையன் திடீர் பல்டி! பன்னீர் தான் உண்மையான அ.தி.மு.க!
அ.தி.மு.க.,செய்தி தொடர்பாளர் பொன்னையன் சசிகலாவிற்கு மிகவும் நெருக்கமாக இருந்து வந்தார். பன்னீர் அதிரடி நடவடிக்கையின் போதும் பன்னீர்செல்வத்தை வசைபாடி சசியின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்து வந்தார்.
இந்நிலையில், அ.தி.மு.க., அவைத்தலைவர் மதுசூதனன் பன்னீர் பக்கம் சென்ற பிறகு அந்த பதவி தனக்கு கிடைக்கும் என நினைத்தார். ஆனால் அந்த பதவி செங்கோட்டையனுக்கு சென்றது. அதையடுத்து இரண்டு நாட்கள் மவுனம் காத்து வந்த பொன்னையன் இன்று திடீர் என பன்னீர் வீட்டிற்கு சென்று ஆதரவு கொடுத்தார்.
முதல்வர் பதவிக்கு பன்னீர் தான் பொறுத்தமான ஆள், சசிகலா வேஸ்ட் என திடீர் பல்டி அடித்தார்.
Comments