கருணாநிதி கூட இவ்வளவு நெருக்கடிகள் தரவில்லை.. பன்னீர் செல்வம் புலம்பல் !!!
![](https://static.wixstatic.com/media/d572ed_85a3c2c55f76491a910989d8186abc1f~mv2.jpg/v1/fill/w_960,h_250,al_c,q_80,enc_auto/d572ed_85a3c2c55f76491a910989d8186abc1f~mv2.jpg)
சென்னை கிரீன்வேஸ் சாலையில் வசித்து வந்த முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் தற்போது போயஸ் கார்டனுக்கு மாறி விட்டார். எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான புதிய அரசு அமைந்த உடனேயே கிரீன்வேஸ் சாலையில் உள்ள அரசு வீட்டை காலி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.
உடனே காலி செய்ய வேண்டும் என்று நெருக்கடிகள் அளிக்கப்பட்டதால் அவரும் அவசரம் அவசரமாக வீட்டை காலி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் பன்னீர் செல்வம் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளார்.
வீட்டை காலி செய்யச் சொல்லி கருணாநிதி கூட இவ்வளவு நெருக்கடிகள் தரவில்லை.வீட்டை காலி செய்யச் சொல்லி சொன்னதும் பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திர நாத் குமார், அவரது மனைவியிடம் வீட்டில் இருக்கும் பொருட்களை எடுத்து பேக் செய்யச் சொல்லி பேசியிருக்கிறார்.
இதை அருகில் இருந்து கேள்விப்பட்ட பன்னீரின் இரண்டாவது மகன் பிரதீப்குமாரின் மகள் சுஜிதா, பன்னீர் செல்வத்திடம் ஓடிச் சென்று ‘தாத்தா இது நம்ம வீடு இல்லையா?’ என்று பன்னீரின் தோளில் சாய்ந்து கேட்டுயிருக்கிறார்.என்ன சொல்வது என்று தெரியாமல் பன்னீர் பாசத்தில் கண் கலங்கியிருக்கிறார்.
பன்னீர் செல்வம் இந்த வீட்டிற்கு வந்த பிறகுதான் அவரது வாழ்வில் முதல்வர், இரண்டு மகன்களுக்கும் திருமணம், பேரக்குழந்தைகள் என்று அனைத்து நல்ல விசயங்களும் நடந்திருக்கிறது.அதனால் பன்னீரை பொறுத்தவரை இது அவருக்கு வீடு என்பதையும் தாண்டி ஒரு முக்கியமான அங்கமாக இருந்திருப்பதை அவருக்கு நெருக்கமான வட்டாரத்தில் பேசியிருக்கிறார்.
மட்டுமின்றி, திமுக ஆட்சியில் எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது கூட வீட்டை காலி செய்யச் சொல்லி கருணாநிதி கூட இவ்வளவு நெருக்கடிகள் தரவில்லை என்று அருகில் இருந்த செம்மலையிடம் முறையிட்டு இருக்கிறார் பன்னீர்செல்வம்.
Comments