ராஜினாமா கடிதத்தில் இருப்பது பன்னீர் கையெழுத்து அல்ல -புகைப்பட ஆதாரம் வெளியானது!
![](https://static.wixstatic.com/media/d572ed_8ee9c4af2f424ca4afeddc26b5eba2ff~mv2.jpg/v1/fill/w_620,h_350,al_c,q_80,enc_auto/d572ed_8ee9c4af2f424ca4afeddc26b5eba2ff~mv2.jpg)
பன்னீர் செல்வம் அளித்த ராஜினாமா கடிதத்தில் இடம்பெற்றுள்ளது அவரது கையெழுத்து கிடையாது என்பதை நிரூபிக்கும் வகையில் புகைப்பட ஆதாரம் வெளியாகியுள்ளது.
நேற்று மெரினாவில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தன்னை வற்புறுத்தி ராஜினாமா கடிதத்தில் கையெழுத்து வாங்கியதாக முதல்வர் கூறியதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் அந்த ராஜினாமா கடிதத்தில் இடம்பெற்றுள்ள கையெழுத்து, முதல்வர் பன்னீர்செல்வத்தின் கையெழுத்து அல்ல என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்பு ஓ.பி.எஸ் தாக்கல் செய்த வேட்பு மனு படிவங்களிலும், வேறு சில ஆவணங்களிலும் அவரது கையெழுத்து உள்ளது.
இந்த ஆவணங்களில் உள்ள கையெழுத்தும்,சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட ஓ.பி.எஸ்-ன் ராஜிமானா கடிதத்தில் இடம்பெற்றுள்ள கையெழுத்தும் ஒரே மாதிரியாக இல்லை.
எனவே முதல்வர் பதவியை ஓ.பி.எஸ் ராஜினாமா செய்யவில்லை எனவும்,சசிகலா தரப்பினர் தான் ராஜினாமா கடிதத்தை தயாரித்து ஆளுநருக்கு அனுப்பியுள்ளனர் எனவும் தகவல்கள் பரவி வருகின்றன.
Comments