பணிவுக்கு கிடைத்த பரிசு பன்னீர்செல்வம் – தொண்டர்கள் பாராட்டு!
![](https://static.wixstatic.com/media/d572ed_2c5c0e7bf39e4cbba06aaf8d64e19e7b~mv2.jpg/v1/fill/w_696,h_392,al_c,q_80,enc_auto/d572ed_2c5c0e7bf39e4cbba06aaf8d64e19e7b~mv2.jpg)
பணிவென்றால், அது பன்னீர்செல்வம் என்று தொண்டர்கள் மட்டுமல்ல பிற அரசியல் கட்சி தலைவர்களும் போற்றும் அளவுக்கு அவரது பணிவு அவருக்கு ஒரு சிறந்த இடத்தை வழங்கியுள்ளது.
முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதா கூட அவரின் பணிவுக்காகவும்,பொறுமைக்காகவும் தான் அவரை தேர்ந்தெடுந்திருப்பார் என்று இப்போது நாம் சிந்தித்து பார்க்க நேரிடுகிறது.
பெருக்கத்து வேண்டும் பணிவு என்று வள்ளுவன் கூறிய வாக்குக்கு அவர் சிறந்த உதாரணமாக உள்ளார். பல்வேறு தரப்பினரும் பன்னீரின் பொறுமையும் பணிவுமே ஒரு உயர்ந்த இடத்தை அளித்துள்ளது.
அதே போல அதிமுக நிர்வாகிகள் மட்டுமே சசிகலாவுக்கு ஆதரவு கொடுக்கின்றனர். ஆனால் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பின்னான இளைஞர்களின் எழுச்சி தமிழக அரசியலிலும் எரிரொலித்து வருவது அவர்கள் சமூக ஊடகங்களில் வெளியிட்டு வரும் கருத்துக்கள் மூலமாக நாம் அறிய முடிகிறது. குறிப்பாக ஒரே ஒரு ஆதரவு பதிவு கூட சசிகலாவுக்கு கிடைக்காமல் இருப்பது பெரிய ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது. ஒரு பெண்ணுக்கு இவ்வளவு எதிர்ப்பா என்று நாம் சிந்திக்க வேண்டிய நிலையில் உள்ளோம்.
ஆனால், பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு குவிகிறது. இதையும் நம்ப முடியவில்லை.
ஜெயலலிதா போன்ற மிகப்பெரிய ஆளுமை தேர்ந்தெடுத்ததால் அவருக்கு கிடைத்த பெருமை என்றாலும் கூட அவரின் பணிவு,பிறருடன் இனிமையான அணுகுமுறை, அவரது செயல்பாடுகள் போன்றவை அவரை முதல்வர் என்கின்ற உயர்ந்த அந்தஸ்து வரை கொண்டு சென்றுள்ளது.
ஏகோபித்த ஆதரவு அவருக்கு கிடைத்து வருகிறது.
Comments