பன்னீர் உயிருக்கு ஆபத்து? உண்மையை உடைத்தால் கொலை மிரட்டல்? அதிர்ச்சி தகவல்
![](https://static.wixstatic.com/media/d572ed_d19a898803a9419e8003f44692493483~mv2.jpg/v1/fill/w_960,h_250,al_c,q_80,enc_auto/d572ed_d19a898803a9419e8003f44692493483~mv2.jpg)
அதிமுகவில், நடக்கும் சதி வேலைகள் குறித்தும், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அப்போலோ நாட்கள் குறித்தும் உண்மையை போட்டு உடைத்த முதல்வர் பன்னீர் செல்வத்தின் உயிருக்கு ஆபத்து உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
முதல்வர் பன்னீர் செல்வம் திடீரென்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்று கண்ணீர் விட்டு அழுதார். கிட்டதட்ட 40 நிமிடங்கள் தியான நிலையில் அமர்ந்து அழுதுக்கொண்டிருந்த அவர், பின்னர் கண்ணீரை துடைத்து கொண்டு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அதில், தன்னை சசிகலா குடும்பத்தினர் இழிவாக பேசியதாகவும், தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தெரிவித்தார். மேலும், தன்னை ஒரு பொம்மை போலவே நடத்தியதாகவும், தன்னை ஒரு பொருட்டாக மதிக்காமல், அவரவர் விருப்பத்திற்கேற்ப முடிவுகள் எடுத்ததாகவும் அவர் பேட்டியளித்தார்.
மேலும், அப்போலோவில் ஜெயலலிதாவை பார்க்க அனுமதிக்கவில்லை என்றும் அவர் உண்மையை போட்டுடைத்தார். இவ்வாறு பல உண்மைகளை அவர் வெளிப்படையாகவும், தைரியமாகவும் பேசியதால் அவரது உயிருக்கு ஆபத்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு முன்னதாகவே எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினைப் பார்த்து சிரித்ததை குற்றமாக கருதி திவாகரன் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக பன்னீர் செல்வம் கூறினார்.
இந்த நிலையில் தற்போது அவர் உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததால் அவரது உயிருக்கு ஆபத்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Comentários