தமிழகம் முழுவதும் பன்னீர் கொடும்பாவி எரிக்க போயஸ் கார்டன் உத்தரவு!
சசிகலாவிற்கு எதிராக பேசிய பன்னீர்செல்வத்தின் கொடும்பாவி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களில் எரித்து பன்னீருக்கு எதிராக ஆர்பாட்டம் நடத்தவேண்டும் என போயஸ் கார்டனில் இருந்து அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அதன்படி தஞ்சை மாவட்டத்தில் பன்னீர் படத்தை அவமதித்து அ.தி.மு.க.,வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த போராட்டத்தில் பத்து பேர் கூட கலந்து கொள்ளவில்லை என்பது தான் பரிதாபம். தொண்டர்கள் ஆதரவு பன்னீருக்கு அதிக அளவில் இருப்பதால் தமிழகம் முழுவதும் போராட்டம் பிசு பிசுக்கும் என அ.தி.மு.க.,வட்டாரம் தெரிவிக்கிறது.
Opmerkingen