எம்.ஜி.ஆர் ஆனார் பன்னீர்! வில்லியானார் சசி! மௌன புரட்சி இங்கேயும் வெல்லுது!
![](https://static.wixstatic.com/media/d572ed_dee6a31061074924b05d9a45b346b433~mv2.jpg/v1/fill/w_620,h_350,al_c,q_80,enc_auto/d572ed_dee6a31061074924b05d9a45b346b433~mv2.jpg)
மெரினா கடற்கரை மாணவர்கள், இளைஞா்களால் வெற்றிக் களமாகவே கொண்டாடப்படுகிறது.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அன்று நடிகா் சிம்பு, 10 நிமிடம் அமைதியாக நின்று எதிர்ப்பை காட்டுங்கள். அது நமக்கு வெற்றியை தரும். என்று தீக்குச்சியை கொளுத்தி போட்டார்.
அது பெரும் நெருப்பாகி. ஐடி இளைஞா்கள் முதல் பள்ளி மாணவ, மாணவிகள் வரை சென்றடைந்து உலகத்தையே திரும்பிப்பார்க்க வைத்தது.
அதுபோல நேற்று அமைதியாக இருக்கும் பன்னீர் செல்வம். இரவு மெரினா கடற்கரையில் ஜெயலலிதா சமாதியில்45 நிமிடம் தியானம் செய்தார். அப்போது ஜெ ஆம்மாவிடம் பேசினார்.
ஜெயலலிதாவின் ஆத்மா கோடன கோடி தொண்டர்கள். பொதுமக்களிடம் உண்மையை சொல்லுங்கள் என்று கூறியது. அதன்படி முதல்முறையாக கைகட்டி, வாய்ப்பொத்தி நிக்கும் பன்னீர் நேற்று வாய்திறந்தார்.
ஜெ சமாதியில் இருந்து கட்சியையும், ஆட்சியையும் மீட்கும் போராட்டத்தில் குதித்துள்ளார்.
மெரினாவில் அமைதி வழியில் தொடங்கிய போராட்டம் வெற்றி தரும் என்பது வரலாறாகவே உள்ளது. பன்னீரின் வெற்றியை, சசிகலாவால் இனி எதுவும் செய்ய முடியாது என்ற நிலைக்கு வந்து விட்டது.
45 நிமிடம் ஜெ சமாதியில், அமைதியான முறையில் ஜெ., ஆத்மாவிடம் மனமிட்டு கதறி பன்னீர் செல்வம், ஒருநாள் இரவில் எம்.ஜி.ஆா் ஆனார்.
முதல்வர் பதவிக்கு காத்து இருக்கும் சசிகலா உண்மை முகம் அனைவருக்கும் தெரியவரும் நிலையில் அவர் வில்லியாகவே இனி பார்க்கப்படுவார் என்று அதிமுகவினரால் பேசப்படுகிறது
Comentários