ஆம்லாவின் அதிரடியில் வீழ்ந்தது பெங்களூர்..! டி.வில்லியர்ஸ் போராட்டம் வீண் !!
![](https://static.wixstatic.com/media/d572ed_9b3d9820b6dd4265b788e7bda1e2bab3~mv2.jpg/v1/fill/w_920,h_250,al_c,q_80,enc_auto/d572ed_9b3d9820b6dd4265b788e7bda1e2bab3~mv2.jpg)
பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
பத்தாவது ஐ.பி.எல் தொடரில் இந்தூரில் இன்று நடைபெற்று வரும் போட்டியில் பெங்களூர் அணியும் பஞ்சாப் அணியும் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
இதில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய பெங்களூர் அணிக்கு அந்த அணியின் கேப்டன் 1 ரன்கள் மட்டுமே முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்து ஏமாற்றினார், அவரை தொடர்ந்து மற்றொரு துவக்க ஆட்டக்காரரான வினோத் 7 ரன்களிலும், கேதர் ஜாதவ் 1 ரன்களிலும், மண்தீப் சிங் 28 ரன்களிலும் வெளியேறினர்.
![](https://static.wixstatic.com/media/d572ed_472e8d9815d041ed96c03ff972a6ac77~mv2.png/v1/fill/w_557,h_316,al_c,q_85,enc_auto/d572ed_472e8d9815d041ed96c03ff972a6ac77~mv2.png)
ஒருபக்கம் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ஏ.பி.டிவில்லியர்ஸூடன் ஜோடி சேர்ந்த ஸ்டூவர் பின்னி நிதானமாக ஆட்டத்தை வெளிப்படுத்தி டி.வில்லியர்ஸுக்கு கைகொடுத்தார்.
இந்த கூட்டணியை பிரிக்க பஞ்சாப் பந்துவீச்சாளர்களின் அனைத்து முயற்சிகளும் வீண் போனதால் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த பெங்களூர் அணி 148 ரன்கள் எடுத்தது.
![](https://static.wixstatic.com/media/d572ed_79e453f3da8540a8ae328736942b3c8c~mv2.png/v1/fill/w_556,h_309,al_c,q_85,enc_auto/d572ed_79e453f3da8540a8ae328736942b3c8c~mv2.png)
பெங்களூர் அணியில் அதிகபட்சமாக அந்த அணியின் அதிரடி ஆட்டக்காரர் டி.வில்லியர்ஸ் 47 பந்துகளுக்கு 89 ரன்கள் எடுத்திருந்தார்.
அதனை தொடர்ந்து 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர் 34 ரன்கள் எடுத்து வெளியேறினார், அவரை தொடர்ந்து களமிறங்கிய அக்ஷர் படேல் 9 ரன்களில் வெளியேறினார்.
![](https://static.wixstatic.com/media/d572ed_aec5c9ae9d8442d9a99bba11ef61b5db~mv2.png/v1/fill/w_559,h_306,al_c,q_85,enc_auto/d572ed_aec5c9ae9d8442d9a99bba11ef61b5db~mv2.png)
அதனை தொடர்ந்து ஜோடி சேர்ந்த ஆம்லா – மேக்ஸ்வெல் கூட்டணி பெங்களூர் அணியின் பந்துவீச்சை சிதறடித்து 14.3 ஓவரில் 150 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
பஞ்சாப் அணி சார்பில் ஆம்லா 58 ரன்களும், மேக்ஸ்வெல் 43 ரன்களும் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
Comentários