ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யுங்கள்! பிரதமரிடம் வலியுறுத்தல்!!
- crazynewschannel
- Feb 27, 2017
- 1 min read

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் நரேந்திரமோடியை டெல்லியில் சந்தித்து பேசினார்.
அப்போது தமிழகத்தின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை படித்துக் காட்டினார். பிரதமருக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கைகளாவது, நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும், ஹைட்ரோ கார்பன் திட்டத்தில் மக்களின் கருத்துக்களை அறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வறட்சி நிவாரண நிதியாக 39560 கோடி ரூபாயும், வர்தா புயல் நிவாரண நிதியாக 22573 கோடி ரூபாயும், பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அரசு தர வேண்டிய 17333 கோடி ரூபாயை உடனடியாக விடுவிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளேன்.
அத்திகடவு அவிநாசி திட்டத்திற்கான ஒப்புதலை விரைந்து வழங்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நதிநீர் ஒழுங்குமுறை குழு அமைக்க வேண்டும்.
தமிழகத்தின் நீர்த்தேவையை நிறைவேற்ற நதிகளை இணைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
Comments