அதிமுக கட்சிக்கு எதிர்காலம் இனிமேல் கிடையாது என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: சொத்து குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்ற அளித்த தீர்ப்பினை பாமக வரவேற்கிறது.
இதே தீர்ப்பு கடந்த ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் வந்திருந்தால் தமிழகத்தில் அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கும். விரைவில் தமிழகத்தில் நிலையான ஆட்சியை உறுதிசெய்ய ஆளுநர் இரண்டு தரப்பையும் தங்களது பெருபான்மையை நிருபிக்க அழைக்க வேண்டும்.
மேலும், எடப்பாடி பழனிச்சாமி ஊழல் குற்றச்சாட்டில் உள்ளார். அவரது குடும்பத்தார் மீது குற்றச்சாட்டு உள்ளது. இதனையும் ஆளுநர் கருத்தில்கொண்டு தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Comments