பஞ்சாப் எல்லையில் பாகிஸ்தானியர் கைது! தேர்தலை சீர்க்குலைக்க சதியா என விசாரணை?
பஞ்சாப் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் சூழலில் அம்மாநில சர்வதேச எல்லையில் இன்று காலை பாகிஸ்தானியர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
117 தொகுதிகள் அடங்கிய பஞ்சாப் சட்டப்பேரவைக்கு இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. இந்த சூழலில், இந்தியா – பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் உள்ள காரிந்தா என்னும் இடத்தில் பாகிஸ்தானியர் ஒருவர் எல்லைப் பாதுகாப்புப் படையினர் நடத்திய கண்காணிப்பில் சிக்கினார். இவரை சந்தேகத்தின் பெயரில் காவலர்கள் கைது செய்தனர்.
தேர்தல் நடக்கும் நாளில் தீவிரவாதிகள் ஊடுறுவலால் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ความคิดเห็น