8 சிக்ஸர்! ருத்ரதாண்டம் ஆடிய கெவின் பீட்டர்சன்..
![](https://static.wixstatic.com/media/d572ed_08aaa9ca00814888a56b80cb31aa8e0b~mv2.jpg/v1/fill/w_960,h_250,al_c,q_80,enc_auto/d572ed_08aaa9ca00814888a56b80cb31aa8e0b~mv2.jpg)
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் கெவின் பீட்டர்சன் அதிரடியால் குவாட்டா கெலாடியேட்டர்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் குவாட்டா கெலாடியேட்டர்ஸ் அணி லாகூர் அணியை எதிர்கொண்டது. இதில் முதலில் பேட்டிங் செய்த லாகூர் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தது.
அதனை தொடர்ந்து 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குவாட்டா அணிக்கு அதிர்சியளிக்கும் விதமாக தொடக்க ஆட்டக்காரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். ஆனால் ஒண்டவுனாக களமிறங்கிய இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் பீட்டர்ஸன் கடைசி நேரத்தில் 8 சிக்ஸர்கள், 3 பவுண்ட்ரிகளை விளாசி 42 பந்துகளில் 88 ரன்கள் குவித்தார் இதன் மூலம் குவாட்டா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Comments