இன்று தலைமை செயலகம் செல்லும் ஒ.பி.எஸ் முக்கிய கோப்புகளில் கையெழுத்து? பயத்தில் சசிகலா தரப்பு!
![](https://static.wixstatic.com/media/d572ed_9831fa3fc8994c0dba3fa816db5558bd~mv2.jpg/v1/fill/w_620,h_350,al_c,q_80,enc_auto/d572ed_9831fa3fc8994c0dba3fa816db5558bd~mv2.jpg)
பெரும் சர்ச்சைகளுக்கு இடையே இன்று முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தலைமைச் செயலகம் செல்ல இருக்கிறார்.
முதல்வர் பன்னீர்செல்வத்திற்கும், சசிகலாவுக்கும் இடையே நடைபெற்று வரும் அதிகார போட்டி காரணமாக, தமிழக அரசியல் களம் பல்வேறு குழப்பங்களை சந்தித்து வருகின்றது. சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய முதல்வர் பன்னீர் செல்வத்திற்கு அதிமுக எம்.பிக்களும்,எம்.எல்.ஏக்களும், அவரது இல்லத்திற்கு வந்து ஆதரவு தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில், இன்று தலைமைச் செயலகத்திற்கு செல்ல உள்ளதாக முதல்வர் ஓ.பி.எஸ் அறிவித்துள்ளது, சசிகலா அணியினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில தினங்களுக்கு முன்னர் செய்தியாளர்களிடம் பேசும் போது,ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்று முதல்வர் பன்னீர் செல்வம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இன்று தலைமைச் செயலகம் செல்லும் முதல்வர் ஓ.பி.எஸ்,விசாரணை கமிஷன் அமைப்பதற்கான கோப்புகளில் கையெழுத்திடலாம் என்று கூறப்படுகிறது.
மேலும்,சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜை பணியிடமாற்றம் செய்தும், சசிகலாவுக்கு ஆதரவாக செயல்படும் அதிகாரிகளை வேறு இடங்களுக்கு மாற்றியும் உத்தரவிட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
Commentaires