ஜூன் 3க்குள் டாஸ்மாக் கடை மூடப்படும்.. அதிகாரிகள் தகவல்!
கோவை சவுரிபாளையத்தில் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள 4 டாஸ்மாக்கடைகள் ஜூன் 3ம் தேதிக்குள் மூடப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.
இரவு நேரத்தில் தனியாக பெண்கள் சாலையில் நடந்து செல்ல முடிவதில்லை. டாஸ்மாக் கடையை மூடவேண்டும் என்று சவுரிபாளையம் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வந்தனர். இவர்களுக்கு ஆதரவாக அரசியல் கட்சியினர் மற்றும் கல்லூரி மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இதனால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று சமாதான முயற்சியில் ஈடுபட்டனர்.
ஆனாலும் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட மறுத்துவிட்டனர். இந்நிலையில், வருகின்ற ஜூன் மாதம் 3ம் தேதி 4 டாஸ்மாக் கடையும் மூடப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனையடுத்து போராட்டத்தை பொதுமக்கள் கைவிட்டனர்.
Comments