ஜியோவை மிஞ்சியது ‘ஏர்டெல் 4ஜி’
- crazynewschannel
- Feb 19, 2017
- 1 min read

இந்திய தொலைதொடர்பு நிறுவனங்களையே கேள்விக்குறியாக்கி புரட்டிப்போட்டது ரிலையன்ஸ் நிறுவனத்தின் ‘ஜியோ’ சேவைதான். இலவச அழைப்பு, டேட்டா உள்ளிட்டவை வழங்கி வாடிக்கையாளர்களை அசத்தி வந்தது.
இந்நிலையில், போட்டி நிறுவனமான ஏர்டெல்லைவிட ஜியோவின் இணையதள சேவை வேகத்தில் பின்தங்கியுள்ளதாக தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) தெரிவித்துள்ளது.
ஜியோ துவங்கிபோது இருந்த வேகம் தற்போது இல்லை என வாடிக்கையாளர்களிடையே குற்றச்சாட்டும் தற்போது எழுந்துள்ளது. கடந்த நவம்பர் மாதத்தில் டவுன்லோட் வேகம் 5 எம்பியாக இருந்த ஏர்டெல் 4ஜி, தற்போது 11.9ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஆனால், ஜியோவின் துவக்கத்திலிருந்த டவுன்லோடு வேகம் 18 எம்பியாக இருந்தது தற்போது 8.3 ஆக குறைந்துள்ளது. இதற்கு காரணம் நாடுமுழுவதும் இலவச சேவைகள் அதிகமாக வழங்கப்பட்டதே காரணம் என ஜியோ வாடிக்கையாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
Comments