4 பத்திரிகையாளர்களுக்கு மரண தண்டனை.. வடகொரியா அதிரடி.!
- crazynewschannel
- Sep 1, 2017
- 1 min read

வட கொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் இடையே நீண்ட காலமாக பகை இருந்து வருகிறது. தென் கொரியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா செயல்பட்டு வருகிறது.
இந்த செயல் வட கொரியாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தும் விதமாக இருந்து வருகிறது. இதற்காக தென் கொரியா மற்றும் அமெரிக்காவை மிரட்டுகின்ற வகையில் அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகளை அவ்வப்போது வீசி சோதனை ஓட்டம் நடத்தி வருகிறது.
இந்நிலையில், சமீபத்தில் வடகொரியா புத்தகம் ஒன்றை வெளியிட்டது இந்த புத்தகம் பற்றி தென்கொரியாவை சேர்ந்த பத்திரிகையாளர்கள் 4 பேர் மதிப்புரை எழுதினார்கள்.
அதில் வடகொரியா பற்றி தவறான கருத்துகளை எழுதி இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
எனவே புத்தகத்துக்கு மதிப்புரை எழுதிய 4 பேருக்கு மரண தண்டனை விதித்து வடகொரியா அதிரடியான தீர்ப்பினை வழங்கியுள்ளது. இந்த சம்பவம் பத்திரிகையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Comments