top of page
My Pick:
Check back soon
Once posts are published, you’ll see them here.
Search By Tag:
Stay In The Know:

இன்னொரு நிர்பயா போராட்டமானது நந்தினி கொலை : மாதரமைப்புகள், கட்சிகள் கையில் எடுத்தன!


டில்லியில் ஓடும் பஸ்சில் நிர்பயா கற்பழித்து பொலை செய்யப்பட்டது போல தமிழகத்தில் அரியலூர் மாவட்டத்தில் ஒரு ஏழை சிறுமியின் வாழ்க்கையை சீரழித்து கொலை செய்தவனை போலீசாரே கண்டுகொள்ளாமல் விட்ட கொடுமையை தமிழகம் பார்த்துக்கொண்டிருக்கிறது.

டில்லியில் நிர்பயா கொலை செய்யப்பட்டதற்கு அங்கு பெண்கள்,திரண்டு நின்று போராட்டம் நடத்தினர். அரசு கதிகலங்கியது. பின்னர்தான் அரசு நிர்பயா விஷயத்தை கையிலெடுத்து ஆக்ஷனில் இறங்கியது.

ஆனால் தமிழகத்தில் ஒரு அப்பாவி குடும்பத்து ஏழை 17 வயது சிறுமியை கற்பழித்து கர்ப்பமாக்கி கொடூரமாக கொலை செய்த கயவனை போலீசார் ஏன் விட்டு வைத்தார்கள்? அவன் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? இதற்கு சில பெண்கள், வளர்ப்பு சரியில்லை என்று பேசுகிறார்கள். ஏழை என்றால் கிள்ளுக்கீரையா? யார் வேண்டுமானாலும் எதையும் பேசிவிடலாமா? மேல் மட்டத்தில் நடக்கும் அசிங்கங்கள் வெளியே தெரிவதில்லை, வருவதும் இல்லை.

கமலுக்கும்,ஸ்ரீப்ரியாவுக்கும் என்ன வந்தது? அவர்கள் மனிதாபிமானத்துடன் அந்த பெண்ணுக்காக குரல் கொடுத்துள்ளனர். எல்லா அரசியல்வாதிகளும் நியாயங்களை அவரவர் சார்ந்த அமைப்பின் பின்னணிப்பார்வையிலேயே பார்க்கின்றனர். யாரும் நடுநிலையான நியாயங்களை பார்ப்பதில்லை.

இதே நிலைதான் அரியலூர் மாவட்டம்,சிறுகடம்பூர் கிராமத்தை சேர்ந்த நந்தினிக்கும் ஏற்பட்டள்ளது. பிறப்புறுப்பின் வழியே கையை விட்டு சிசுவை கசக்கிப்பிழிந்த கயவனை போலீசார் கண்டுகொள்ளாமல் இருப்பது, மனிதாபிமானம் தமிழகத்தில் மரணித்து வருவதின் அடையாளம்.

இதற்கும் இளைஞர் கூட்டம்தான் இறங்க வேண்டுமா? இதோ தற்போது இந்த அவலம் தமிழகம் முழுவதும் பரவி மாதர் அமைப்புகள்,கட்சியினர் விழித்தெழுந்து போராட தொடங்கிவிட்டனர். தமிழகத்திலும் ஒரு நிர்பயா போராட்டம்? நீதி கிடைக்குமா நந்தினி குடும்பத்தினருக்கு.

‘தலித்’ என்றால் மனிதர்கள் இல்லையா-? கொதிக்கிறது நெஞ்சம்...


Comments


© 2023 by The Beauty Room. Proudly created with Wix.com

bottom of page