நாளை சசிகலா முதல்வராக பதவியேற்கிறார் – பிரச்சனை வராமல் தடுக்க ரகசிய கண்காணிப்பில் அதிமுக எம்.எல்.ஏக்
![](https://static.wixstatic.com/media/d572ed_4d86efe3caf94278b9961dcfb88856a2~mv2.jpg/v1/fill/w_696,h_392,al_c,q_80,enc_auto/d572ed_4d86efe3caf94278b9961dcfb88856a2~mv2.jpg)
அதிமுக பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பின், புதிய பொதுச் செயலாளராக சசிகலா கடந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி பதிவி ஏற்றார். இதனைதொடர்ந்து சசிகலா தமிழக முதல்வராக பதவி ஏற்க வேண்டுமென்று மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை உள்பட அதிமுகவின் முக்கிய அமைச்சர்கள் கூறி வந்தனர். இந்த நிலையில், அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மதியம் 1 மணி அளவில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கலந்துக்கொள்ளும் எம்.எல்.ஏ.க்கள் கட்சிக்கு சம்பந்தமில்லாத யாரிடமும் செல்போனில் பேசக்கூடாது என்று அதிமுக தலைமை உத்தரவு பிறப்பித்துள்ளது. எம்.எல்.ஏ.க்களும் உளவுத்துறையின் கண்காணிப்புக்கு பயந்து யாரிடமும் பேசவில்லை. சிலர் வாட்ஸ் அப்பில் மட்டும் பேசிக்கொள்கிறார்களாம். மேலும் கூட்டத்துக்கு வரும் எம்.எல்.ஏக்கள் அவர்களது தொகுதி மக்களுக்கு என்னென்ன தேவை உள்ளது என்று ஒரு பட்டியல் தயாரித்து வரும்படி மேலிடத்திலிருந்து உத்தரவு சென்றிருக்கிறதாம். இந்த உத்தரவால் எம்.எல்.ஏக்களும் தங்களது தொகுதியின் தேவைகளை பட்டியலிட்டு கூட்டத்துக்கு எடுத்து வருகிறார்களாம். தொகுதி தேவை பட்டியல்களை கூட்டத்துக்கு எடுத்து வந்தாலும், இன்று நடைபெறும் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் மக்கள் பிரச்னைகள் குறித்து மட்டும் பேசப்போகிறார்களா என்றால் அதுவும் இல்லை. சசிகலா நாளை தமிழக முதல்வராக பதவியேற்கும் செய்தி முன்கூட்டியே வெளியில் கசிந்தால் அவர் பதவியேற்பதை விரும்பாத சிலர் கூட்டமாக வந்து எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்றும், அது ஊடகங்களில் செய்தியாக வெளிவரும் என்றும் அதன் மூலம் பதவியேற்பு சங்கடத்தை ஏற்படுத்தும் என்று மேலிடம் கருதுவதால் நாளை சசிகலா முதல்வராக பதவியேற்பதை ரகசியமாக வைத்திருக்கிறார்களாம். இதனால் தான் கூட்டத்துக்கு வரும் எம்.எல்.ஏக்களிடம் கூட நாளை சசிகலா முதல்வராக பதவியேற்க போகிறார் என்பதை வெளிப்படையாக கூறாமல் இருக்கிறார்களாம்.
Comentarios