ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை வென்றது நியூசிலாந்து!
![](https://static.wixstatic.com/media/d572ed_6073bfc41ea441e187916239f95fc22e~mv2.jpg/v1/fill/w_900,h_300,al_c,q_80,enc_auto/d572ed_6073bfc41ea441e187916239f95fc22e~mv2.jpg)
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் 24 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட சேப்பல்-ஹாட்லி தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றது. 2வது போட்டி ரத்து செய்யப்பட்டு விட்டது.
இந்நிலையில் 3வது மற்றும் கடைசி போட்டி ஹாமில்டனில் இன்று நடைபெற்றது.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 281 ரன் குவித்தது. அதிகபட்சமாக ரோஸ் டெய்லர் 107 ப்ரவுன்லி 63 ரன் எடுத்தனர். ஆஸ்திரேலியா தரப்பில் ஸ்டார்க், பால்க்னர் தலா 3, ஹேசல்வுட் 2, கம்மின்ஸ் 1 விக்கெட் வீழ்த்தினர்.
அதனை தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 47 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 257 ரன் எடுத்து தோல்வி அடைந்தது. ஆஸ்திரேலியா அணியில் அதிபட்சமாக பின்ச் 56, டிராவிஸ் ஹெட் 53 ரன் எடுத்தனர். நியூசிலாந்து அணி தரப்பில் ட்ரென்ட் போல்ட் சிறப்பாக பந்து வீசி 6 விக்கெட்டை வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி தொடரை கைப்பற்றியுள்ளது.
Comments