ரேபிஸ் நோய் தாக்கப்பட்ட பசு உயிரிழப்பு : கிராம மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்தல்
- crazynewschannel
- Feb 4, 2017
- 1 min read

ரேபிஸ் நோயால் தாக்கப்பட்ட பசு ஒன்று கிராம மக்களை முட்டியதால் அவர்களுக்கு ரேபிஸ் நோய் தடுப்பூசி போடப்பட்டது. மறைமலை நகர் அருகே இருக்கும் கீழ்கரணை என்ற கிராமத்தில் உள்ள பசு ஒன்று ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்தது. நோய் தாக்குதலுக்கு ஆளான, அந்த பசு கிராமத்தில் உள்ள 20 பேரை முட்டி தாக்கியுள்ளது. இது குறித்து, விலங்குகள் நலவாரியமான புளூ கிராசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே புளூ கிராசின் பொது மேலாளர் டான் வில்லியம் தனது குழுவுடன் கிராமத்திற்கு சென்று, அங்கிருந்த பசுவை வேளச்சேரியில் உள்ள புளூ கிராசுக்கு அழைத்து வந்தனர். அங்கு சோதனை செய்தப்போது பசு ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்பு பசு உயிரிழந்தது. பசுவின் பிரேத பரிசோதனை சென்னை கால்நடை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்றது. அதில் உயிரிழந்த பசுவின் மூளை ரேபிஸ் கிருமிகளால் பாதிக்கப்பட்டிருப்பது உண்மை என டான் வில்லியம் தெரிவித்தார். மேலும், அந்த பசு யாரையெல்லாம் தாக்கியதோ அவர்கள் அனைவரும் தாமதமின்றி ரேபிஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படி வில்லியம் கூறினார். அதன்படி 15 பேருக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டது. மீதமுள்ளவர்களுக்கு இன்று தடுப்பூசி போடப்படும் என்று வில்லியம் கூறினார்.
Comments