கர்ப்பிணிகளுக்கு நிதி 18,000-ஆக உயர்வு, இருசக்கர வாகனத்திற்கு ரூ.20,000 – முதல்வர் கையெழுத்து!
முதல்வராக அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்று கொண்ட எடப்பாடி பழனிச்சாமி, பதவியேற்றவுடன் முக்கியமான 5 கோப்புகளில் கையெழுத்திட்டார்.
இதில், ஏழை கர்ப்பிணி பெண்களுக்கு, முத்துலட்சுமி மகப்பெறு நிதியுதவி திட்டத்தின் கீழ் ரூ.12000 த்தில் இருந்து 18000 ரூபாயாக அதிகரித்து முதல்வர் கையெழுத்திட்டார்.
அதேபோல், அம்மா இருசக்கர வாகானம் வாங்க ரூ.20000 மானியம் வழங்க, முதற்கட்டமாக ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்து முதல்வர் கையெழுத்திட்டார்.
மீனவர்களுக்கு ரூ.1.70 லட்சம் மதிப்பீட்டில் 5 லட்சம் வீடுகள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்து கோப்பையில் கையெழுத்திட்டார் முதல்வர். இதற்காக ரூ.85 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல், 500 மதுபான கடைகளை மூடவும், வேலை இல்லாத இளைஞர்களுக்கு மாதாந்திர உதவி தொகை இரண்டு மடங்காக உயர்த்தியும் முதல்வர் கோப்புகளில் கையெழுத்திட்டார்.
Commentaires