நெடுவாசல் போராட்டக்குழு நாளை முதலமைச்சரை சந்திக்க ஏற்பாடு : அமைச்சர் தகவல்.!
![](https://static.wixstatic.com/media/d572ed_3967407c6810411dab59e09582e6b2fa~mv2.jpg/v1/fill/w_696,h_392,al_c,q_80,enc_auto/d572ed_3967407c6810411dab59e09582e6b2fa~mv2.jpg)
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்கும் திட்டத்துக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
கடந்த 10 நாட்களாக மாணவர்கள், பொதுமக்கள் என பல்வேறு அமைப்புகள் தங்களது எதிர்ப்பை தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று போராட்டம் நடத்தும் நெடுவாசல் கிராம மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு எதும் எட்டப்படவில்லை என்று தகவல் வெளியாகியது.
இதனையடுத்து போராட்டக்குழுவினர் நாளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து ஹைட்ரோ கார்பன் எரிவாயு திட்டத்தை தமிழக அரசு புறக்கணிக்க வேண்டும் என்று கோரிக்கை மனு அளிக்க போவதாக தெரிவித்துள்ளனர்.
முதலமைச்சர் சந்திப்புக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் ஏற்பாடு செய்துள்ளார். இந்த குழுவினர் நாளை முதல்வரை சந்திக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
Comments