நயன்தாரா இப்போது ஹீரோயின் ஓரியண்டட் படம்னாலே கதை கேட்க உடனே டைம் தர்றார். அப்படி மிஷ்கினின் துணை இயக்குனர் ஒருவர் தயாரிப்பு நிறுவனம் ஈராஸ் சினிமாவிடம் கதை சொல்லி ஓகே சொல்லிவிட்டார். அதன்பின் ஹீரோயின் நயன்தாரா என்று அவர்களிடம் ஒப்புதல் வாங்கினார்.
நயன்தாராவிடமும் டைம் வாங்கியாச்சு. அவரிடம் கதைய சொல்ல சொல்ல, சூப்பர் என்றே சொல்லிவிட்டார். எப்போது டேட் என்பது வரை பேசியாச்சு.
அந்த கதை இலங்கை பெண் ஒருவரின் கதையாம். அதை அறிந்த வட்டாரம் நயனுக்கு போனை போட்டு, ‘நல்லா வந்துட்டு இருக்கீங்க, இலங்கை கதைனாலே பிரச்சனை தான். வேணுமா?’ என்று கேட்டு வைக்க, அவ்வளவுதான் ஆஹா என்ற நயன், வேண்டாம் என்று அலறிவிட்டாராம்.
அப்படி நயனிடம் பேசியது அசிஸ்டெண்ட்டின் நல விரும்பியாம். ஆசானாம். இதுக்கும் மேல க்ளூ தரமுடியாது.
Comentarios