பாகுபலி படமே எனக்காகத் தான்! நாசர் பேச்சு!
![](https://static.wixstatic.com/media/d572ed_ec8aeb0a5f8143b49a5b2c69f842af54~mv2.jpg/v1/fill/w_920,h_250,al_c,q_80,enc_auto/d572ed_ec8aeb0a5f8143b49a5b2c69f842af54~mv2.jpg)
எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக வெளிவந்து வெற்றி பெற்ற பாகுபலி’ படத்தின் இரண்டாம் பாகம் வருகிற ஏப்ரல் 28ம் வெளியாகிறது. இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் நடிகர் நாசர் கூறியதாவது:
பாகுபலி-2’ படம் ஒரு விளம்பரமே இல்லாமல் ரிலீஸ் தேதியை மட்டும் அறிவித்து இருந்தாலே படம் ஹிட்டாகியிருக்கும்.விளம்பரம் செய்யவேண்டும் என்ற கடமையில் தற்போது விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது. நடிகர் பிரபாஸ் முதல் நடிகை அனுஷ்கா வரை எல்லாரையும் சிக்ஸ் பேக் வைக்க இயக்குனர் சொன்னார்.
ஆனால் எனக்கு மட்டும் பேமலி பேக் என்றார். ராஜமெளலி என்னிடம் கதை சொல்லும் போது நீங்கள் இல்லையென்றால் கதையே கிடையாது. அந்த நேரத்தில் எனக்கு பொறி தட்டியது, நான் தான் பாகுபலி போன்ற உத்வேகத்தை எனக்கு ராஜமெளலி கொடுத்தார்.
இந்த படம் எத்தனை கோடி சம்பாதிக்கும் என்பதெல்லாம் ஒரு பெருமை கிடையாது. தயாரிப்பு, இயக்கம், நடிப்பு, வெளியீடு தான் பெருமை என்றார்.
Comments