பிப்ரவரி 24 பிரதமர் மோடி கோவை வருகை : மாணவர்களை கறுப்பு உடையணிய வலியுறுத்தும் விஷமிகள்!
![](https://static.wixstatic.com/media/d572ed_6f4650ff47554c3784195cebcb475b56~mv2.jpg/v1/fill/w_696,h_435,al_c,q_80,enc_auto/d572ed_6f4650ff47554c3784195cebcb475b56~mv2.jpg)
ஊர் சுத்தர மோடி தமிழ்நாட்டு பக்கம் வாடினு சொன்ன நட்புகள் கவனத்திற்கு, பிப். 24 கோவைக்கு வருகிறார் மோடி. இதை பச்சை தமிழன் மட்டுமல்ல, பிங் தமிழன், புளு தமிழன், சிகப்பு தமிழன், பிரவுன் தமிழன் என அனைது நிற தமிழனும் சேர் பன்னுங்க..
இப்படி ஒரு மெசேஜ் வாட்ஸ் ஆப் குழு மாணவர்களிடையே தீயாக பரவுகிறது. இதற்கு சமூகவலைத் தளங்களில் ஆதரவாக ஒரு பெரிய க்ரூப்பே செயல்படுகிறது.
சிலர் மோடி வருகையின் போது கறுப்பு உடையணிந்து எதிர்ப்பைக் காட்ட வேண்டும் என்று இளைஞர்களை வலியுறுத்தி வருவதாகவும் சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவுகின்றன.
ஆனால், இது இளைஞர்களுக்கு தவறான வழிகாட்டுதல் என்பதை அந்த விஷமிகள் புரிந்துகொள்ள வேண்டும்.
இன்னொரு க்ரூப்போ வாங்கியது பத்தாது போல மீண்டும் வாங்கினால் தான் இந்த ஸ்கூல் பசங்க அடங்குவானுக என்றும் ஒரு தரப்பு கூறுகிறது.கருப்பு சட்டை போட நேரம் வந்துருச்சு. இனி என்ன்னகுமோ என்று ஒரு பதட்டம் பற்றிக் கொண்டுள்ளது.
இதில் ஒன்று மட்டும் நிச்சயமாக தெரிகிறது. அரசியல்வாதிகள் இளைஞர்கள் மீண்டும் ஒன்று சேர்ந்துவிடக்கூடாது என்பதில் மிகத் தெளிவாக இருக்கிறார்கள். ஆனால்,இளைஞர் கூட்டம் அதை புரிந்து கொள்ள வேண்டும்.
இளைஞர்கள் பிளவுபட்டுவிடாமல் செயலாற்ற வேண்டும். வேண்டுமென்றே அரசியல் சூழ்ச்சிகள் உங்களை பிரித்தாள முன்னேற்பாடுகள் செய்யலாம். அந்த தடைகளையெல்லாம் தகர்த்தெறிய வேண்டும். புறப்படுங்கள், நேர்வழியில் களம் காண.
Comments