போலி நபர்களை கண்டுபிடிக்க செல்போன் எண்ணுடன் ஆதார் இணைக்கவேண்டும்: உச்சநீதிமன்றம்
![](https://static.wixstatic.com/media/d572ed_d05e48cf63f6408e8652b108186e3152~mv2.jpg/v1/fill/w_620,h_350,al_c,q_80,enc_auto/d572ed_d05e48cf63f6408e8652b108186e3152~mv2.jpg)
போலி சிம் கார்டுகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களை கண்டுபிடிக்க ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் 110 கோடி மக்கள் செல்போன் சேவைகளை பயன்படுத்துகின்றனர். வங்கி சேவை மற்றும் இதர சேவைகளுக்காக வாடிக்கையாளர்கள் செல்போன் எண்ணை இணைக்க வேண்டியுள்ளது.
எனவே வங்கிசேவை தற்போது அனைத்தும் டிஜிட்டல் மயமாக மாறிவிட்டது. தனிப்பட்ட தகவல்களை வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்வதற்காக செல்போன் எண் கட்டாயம் கொடுக்கவேண்டிய நிலை உருவாகியுள்ளது.
போலியான எண்ணை கொடுத்து சிலர் வங்கிகளில் மோசடியில் ஈடுபடுகின்றனர். இதனை தடுக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் அனைத்து வாடிக்கையாளர்களும் செல்போன் எண்ணுடன் ஆதார் எண்ணை கட்டாயம் பதிவு செய்து கொள்ளவேண்டும்.
அதன் மூலம் எந்த வாடிக்கையாளர்களையும் எளிதில் கண்டுபிடித்து விடலாம். மத்திய அரசு ஒரு வருடத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Comments