தீபா ஆதரவாளருக்கு தர்ம அடிகொடுத்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி!
![](https://static.wixstatic.com/media/d572ed_1414096e41c140f19a968643028368c9~mv2.jpg/v1/fill/w_620,h_350,al_c,q_80,enc_auto/d572ed_1414096e41c140f19a968643028368c9~mv2.jpg)
சின்னம்மாவுக்கும் உனக்கும் என்ன பிரச்சனை என்று அப்பாவி தொண்டர் ஒருவரை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பொது இடத்தில் அடித்து ரகளை செய்தார்.
தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அண்ணா திமுக தொண்டர் ஒருவரை ஆபாசமாக பேசியதோடு தன் ஆதரவாளர்களுடன் சேர்ந்து அவரை அடித்து நொறுக்கினார்.
அதற்கு ஆதாரமான ஒரு வீடியோ காட்சி தற்போது பரபரப்பாக சுழன்று கொண்டிருக்கிறருது. அடிவாங்கும் தொண்டரை பார்த்து டேய் உனக்கும் சின்னம்மாவுக்கும் என்ன பிரச்சனை என்கிறார். அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.
அதெல்லாம் ஒரு பிரச்சனையுமில்லீங்க! நான் காட்சிக்காரனுங்க என்கிறார் அடிவாங்கும் அப்பாவி தொண்டன்.
ஆனால் அதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளாத அமைச்சரும், அவரது எடுபிடிகளும் அந்த அப்பாவியை சரமாரியாய் தாக்கி அவரது சட்டை பாக்கெட்டுக்குள் இருந்ததையெல்லாம் அபகரிக்கின்றனர்.
இந்த அராஜக காட்சிகள் அனைத்தையும் போலிசாரும், அமமைச்சரின் பாதுகாவலரும் வேடிக்கை பார்த்தனர். இன்னும் சொல்லப் போனால் தர்மடியில் அவர்களும் பங்கேற்றனர்.
இவ்வளவு அடிவாங்கியும் கூட நான் தான் சின்னம்மா பேனரை கிழித்தேன் என்று கெத்தாக சொன்ன அடிவாங்கியவரிடம், டேய் உன்னை தீபா குரூப்தான் அனுப்பிச்சதா என்று மிரட்டினர்.
இந்த காட்சிகள் தான் அந்த வீடியோவில் இடம்பெற்றிருக்கிறது. அவற்றை பார்ப்பவர்கள், மக்கள் மனதை அந்த தொண்டர் பிரதிபலித்திருப்பதாக சொல்கிறார்கள்.
இப்போது ஊரெல்லாம் சின்னம்மா பேனரை கிழிக்க வேண்டும், சாணி அடிக்க வேண்டுமென்று ஒருகும்பல் களமிறக்கிவிடப்பட்டிருக்கிறார்கள் அதன் எதிரொலியாக நடந்தது.
Comentarios