மெரினாவில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த இளைஞர்கள் கைது!
புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் கிராமத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் கடந்த 12 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தினால் விவசாயம் முற்றிலும் அழிந்துவிடும் என்று விவசாயிகள் தொடர்ந்து இத்திட்டத்தை செயல்படுத்தக்கூடாது என்று அறவழியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை மெரினாவில் 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் நெடுவாசல் கிராம மக்களுக்கு ஆதரவு தெரிவித்து திருவள்ளூர் சிலை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை அறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று 10 இளைஞர்களை கைது செய்தனர். இந்த சம்பவத்தால் மெரினாவில் மேலும் இளைஞர்கள் ஒன்றிணைந்து விடுவார்கள் என்று போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Comments