“கல்யாணம் நின்னுடுச்சி”- சமந்தா மாமனார் அறிவிப்பு! திரையுலகம் அதிர்ச்சி!
![](https://static.wixstatic.com/media/d572ed_93f72e895132451383012ca5d1913c6b~mv2.jpg/v1/fill/w_960,h_250,al_c,q_80,enc_auto/d572ed_93f72e895132451383012ca5d1913c6b~mv2.jpg)
நாகர்ஜூனாவின் மூத்த பையன் நாக சைதன்யாவிற்கும், நடிகை சமந்தாவுக்கும் சில வாரங்கள் முன்பு தான் திருமணம் நிச்சயம் ஆனது. அதற்கு சில மாதங்கள் முன்பு அவரின் இளையமகன் அகிலுக்கும் தொழிலதிபர் மகளும், காஸ்டியூம் டிசைனருமான ஸ்ரேயா பூபலுக்கும் நிச்சயம் நடந்தது.
அதனால் மிகுந்த சந்தோஷத்தில் நாகர்ஜுனா,’இரண்டு மகள்கள் வீட்டிற்கு வர
போகிறார்கள்” என்று சந்தோசப்பட்டுக்கொண்டு இருந்தார். அதில் யார் கண் பட்டதோ, தெரியவில்லை.
அகிலுக்கும், ஸ்ரேயாவிற்கும் இடையில் பிரச்சனை ஏற்பட்டு பிரிந்துவிட்டார்களாம். இரண்டு வீட்டினரும் இருவரையும் சமாதானம் செய்ய, இருவரும் ஒத்து வரவில்லையாம்.
அதனால் இத்தாலியில் நடக்கவிருந்த திருமணம் நிறுத்தப்பட்டது. திருமணத்திற்கு அழைப்பிதழ் கொடுத்தவர்களிடம், இத்தாலிக்கு போட்ட டிக்கெட்டை கேன்சல் செய்யுங்கள். திருமணம் நின்றுவிட்டது. யாரும் வரவேண்டாம் என்று சொல்லிவிட்டார்களாம்.
பல காலமாக லவ் பண்ணிக்கொண்டு இருந்த இருவருக்கும் நிச்சயம் ஆன உடனே மனவருத்தம் ஏற்பட்டு இருப்பது விசித்திரமாக உள்ளது என்று திரையுலகம் அதிர்ச்சியாக பார்த்துக்கொண்டு இருக்கிறது.
Comments