சேலத்தில் ரூ.25 கோடி மதிப்பிலான மரகதலிங்கம் சிலை மீட்பு!
சேலம் மாவட்டம் ஓமலூரில் தேசிய நெடுஞ்சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான காரை நிறுத்தி சோதனையிட்ட போது மரகத லிங்கம் சிலையுடன் 5 பேர் இருந்தனர்.
உடனடியாக போலீசார் காரில் இருந்த 5 பேரையும் கைது செய்து தாரமங்கலம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
இதன் பின்னர் ஜஜி பொன்.மாணிக்கவேல் கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தியதில் மரகத லிங்கத்தின் மதிப்பு ரூ.25 கோடி என்றும் இந்த லிங்கம் தமிழகத்திலேயே பெரிய சிலை என்று தெரியவந்துள்ளது.
Comments