மணப்பாடு படகு விபத்து; உயிரிழந்தோருக்கு ரூ.2 லட்சம் நிவாரணம்!!
திருச்சி மற்றும் தூத்துக்குடி பகுதியைச் சேர்ந்த சுமார் 38 பேர் மணப்பாடு பகுதிக்கு சுற்றுலா சென்றிருந்தனர். அவர்கள் குழுவாக நேற்று கடலுக்குள் படகு சவாரி சென்றதாகக் கூறப்படுகிறது. அப்போது, கடலில் எழுந்த ராட்சத அலையால் படகில் பயணம் செய்த 9 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
இதுகுறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விடுத்துள்ள அறிக்கையில், மணப்பாடு கடல்பகுதியில் அலையில் சிக்கி உயிரிழந்த சம்பவத்திற்கு தனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்தார்.
மேலும், உயிரிழந்த 9 பேரின் குடும்பத்திற்கு முதல்வரின் பொதுநிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தோருக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
Comments