லண்டனில் மீண்டும் தீவிரவாதிகள் தாக்குதல்..! மக்கள் அலறி அடித்து ஓட்டம்..! 2 பேர் உயிரிழப்பு..!
- crazynewschannel
- Jun 4, 2017
- 1 min read

விடிந்தால் ஞாயிறு விடுமுறை என்பதால் நேற்று இரவு லண்டன் நகரில் தியேட்டர்கள்,மார்க்கட்டுகள், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்கள், பொழுது போக்கு இடங்கள் என பல இடங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது.

இந்த நிலையில் இரவு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். மத்திய லண்டன் பகுதியில் தாக்கியதில் 2 பேர் கொல்லப்பட்டுள்ளனர். லண்டன் பிரிட்ஜ், போரோ மார்க்கெட் மற்றும் தேம்ஸ் நதியின் தெற்கு பகுதியில் ஒரே நேரத்தில் திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்டது. உடனே லண்டன் பிரிட்ஜ் பகுதி மூடப்பட்டது.

லண்டன் பிரிட்ஜ் பகுதியில் ஒரு வெள்ளை நிற வேனில் வந்த தீவிரவாதிகள் அங்கு நின்று கொண்டிருந்த மக்கள் மீது கண்மூடித்தனமாக ஏற்றினர். அதில் 20க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் அப்பகுதியில் இருந்த சில தீவிரவாதிகள் பாதையில் நடந்து சென்ற மக்களை கத்தியால் கண்மூடித்தனமாக குத்தியதையும் பலர் பார்த்துள்ளனர்.

தற்போதைய நிலையில் போலீசார் தாக்குதல் நடத்தப்பட்ட பகுதிகள் அனைத்தையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். தாக்குதலை நேரில் பார்த்தவர்கள் கூறும்போது, ஒருவன் நீண்ட கத்தி வைத்திருந்தான். நடந்து சென்றவர்களை ஹிஸ்டீரியா பேஷண்ட் போல கத்திக்கொண்டு குத்தினான். Êசவுத் வார்க் பகுதியில் உள்ள ரெஸ்டாரரெண்ட்டுக்குள் தீவிரவாதிகள் நுழைவதற்குள் போலீசார் அங்கிருந்த மக்களை பாதுகாப்பாக வெளியேற்றினர்.தாக்குதல் நடத்திய போது இது அல்லாவுக்காக என்று கத்தியுள்ளனர்.

போரோ மார்க்கெட் பகுதியில் பாட்டில்களை கட்டிக்கொண்டு ஒருவன் வீழ்ந்து கிடந்தான். அவன் வெடிகுண்டு கட்டியிருப்பானோ என்ற அச்சம் ஏற்பட்டது. ஆனால் அது தீவிரவாதிகள் கட்டிவிட்டது என்று தெரிய வந்தது. வெஸ்ட் மின்ஸ்டர் பகுதியில் பல இடங்களில் துப்பாக்கியால் சுட்ட சத்தங்களையும் கேட்டதாக பலர் கூறியுள்ளனர். தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments