கூலிக்கு மாறடிக்கிற கூட்டத்தை வச்சுகிட்டு ஆட்டமா போடுற! சசிகலாவை வெளுத்து வாங்கிய பெண்! வீடியோவை பார
- crazynewschannel
- Feb 6, 2017
- 1 min read

அதிமுகவின் அனைத்து எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை கூட்டத்தில் சசிகலா தமிழக முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவித்துள்ளனர். இந்த முடிவுக்கு தமிழகமெங்கும் பல்வேறு தரப்பினர் கண்டன குரல்கள் எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில், தமிழகத்தை சேர்ந்த சாதாரண ஒரு பெண்மணி சசிகலா முதல்வராவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது; ஜெயலலிதா இருக்கும் வரை அவருக்கு பின்னால் அடங்கி இருந்த சசிகலா, அவர் இறந்த பிறகு, இன்று அலங்கரித்து கொண்டு கட்சியை கைப்பற்றினார்.
மேலும், யாரோ எழுதியதை தனது கழுதை குரலில் படித்துகாட்டி பதவியேற்கிறார் சசிகலா. அம்மாவின் உண்மையான தோழியாக இருந்திருந்தால் அவர் இறந்தபிறகு அந்த இடத்தை விட்டு வெளியே போயிருக்க வேண்டும்.
அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்களை பார்த்து கொள்ள வேண்டும் என்றும் ஜெயலலிதா கூறியதாக சொல்லும் சசிகலா, ஒரு 10 பேரிடமாவது கருத்தை கேட்டிருக்க வேண்டும்.
ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டிருந்த போது யாரையும் அனுமதிக்காத சசிகலா, கிருமி தொற்று என்றும் கூறும் சசிகலாவை அந்த கிருமி தொற்றாதா.
32 வருஷமா உண்மை தோழியாக இருந்தேன் என்கிறாய். அப்படியே இருக்கட்டும் நீ நல்லது செய்ததாகவே இருக்கட்டும். ஆனால் ஜெயலலிதா சாவில் உள்ள மர்மத்தை ஏன் சொல்லவில்லை.
முதல்வர் பதவி என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். நாமாளாக எடுத்து கொள்ள கூடாது.
உண்மையிலேயே நீ நல்லது செய்ய வேண்டும் என்றால் தேர்தலில் நின்று ஜெயித்து முதல்வராகு என்று ஆவேசமாக அந்த பெண்மணி தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.
Comments