கே.ஆர்.பி அணை நிரம்பியது.. உஷார் நிலையில் இருக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு.!
கே.ஆர்.பி அணை நிரம்பியதால், அதிகாரிகள் உஷார் நிலையில் இருக்க கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் மற்றும் தமிழகத்தில் மழை கடந்த 10 நாட்களாக பெய்து வருகின்றது. இதன் காரணமாக 52 அடி உயரம் கொண்ட கே.ஆர்.பி அணை நிரம்பி வழியத்தொடங்கியது.
இதனால் பிரதான கால்வாய் வழியாக 3037 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும், அணையின் தரைப்பாலத்திற்க்கு மேல் நீர் செல்கின்றது.
இதனால் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
அணையில் இருந்து அதிகளவு நீர் திறக்கப்பட்டுள்ளதால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோர உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு கலெக்டர் கதிரவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Comentarios