நான் ரப்பர் ஸ்டாம்ப் கவர்னர் அல்ல- கிரண்பேடி அதிரடி...
![](https://static.wixstatic.com/media/d572ed_6f930f76853140d086cc5708e3d38bf9~mv2.jpg/v1/fill/w_650,h_320,al_c,q_80,enc_auto/d572ed_6f930f76853140d086cc5708e3d38bf9~mv2.jpg)
அமைச்சர்கள் விரும்புவதைப்போல ரப்பர் ஸ்டாம்ப் கவர்னராக என்னால் இருக்க முடியாது என புதுச்சேரி கவர்னர் கிரண் பேடி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி மாநிலத்தில் கவர்னர் மற்றும் அரசுக்கு இடையே தொடர்ந்து மோதல் போக்கு நீடித்து வருகிறது. அமைச்சர்கள் அனுப்பும் பல கோப்புகளுக்கு கவர்னர் ஒப்புதல் அளிப்பதில்லை. இதனால் பல்வேறு திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளது என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட அமைச்சர்கள் குடியரசுத்தலைவர் மற்றும் மத்திய அமைச்சர்களிடம் புகார் அளித்தனர்.
இந்த புகார் குறித்து கிரண்பேடி கூறும்போது, முந்தைய கவர்னர்களை போல் நான் செயல்பட முடியாது. எனக்கு அனுப்பப்படும் கோப்புகளை கவனமாக ஆய்வு செய்த பிறகே கையொப்பமிடுகிறேன். அதில் குறைகள், தவறுகள் இருக்கும் பட்சத்தில் திருத்தம் செய்ய திருப்பி அனுப்புவேன். திருத்திய பின்னரே ஒப்புதல் அளிப்பேன்.
நான் ரப்பர் ஸ்டாம்ப் கவர்னராக செயல்பட வேண்டும் என அமைச்சர்கள் விரும்புகின்றனர். அதுபோல என்னால் இருக்க முடியாது. நான் அதிகாரிகள் இட மாற்றத்துக்கு கூட ஒப்புதல் அளிக்கவில்லை என கூறுகின்றனர். உண்மையில் எந்த கோப்பும் தேங்கி இருக்கவில்லை. நான் முதல்வருக்கு அனுப்பிய கோப்புகளின் விவரம் அடங்கிய பட்டியல் என்வசம் உள்ளது என்றார்.
Kommentare