இலங்கைக்கு எதிராக சதம் அடித்த கோஹ்லி..! புதிய சாதனை படைத்தார்…!!
- crazynewschannel
- Sep 1, 2017
- 1 min read

இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது.
ஏற்கனவே 3&0 என்ற கணக்கில் தொடரை இந்திய அணி வென்று அசத்தி இருந்தது.
இந்த நிலையில் 4வது ஒருநாள் போட்டி கொழும்புவில் உள்ள பிரேமதாசா விளையாட்டு மைதானத்தில் நடந்து வருகிறது.
இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக தவான் மற்றும் ரோகித் சர்மா களம் இறங்கினர்.
தவான் 4 ரன்னில் அவுட் ஆனார். இவரை தொடர்ந்து கோஹ்லி களம் இறங்கி ரோகித் சர்மாவுடன் அதிரடி காட்டினார்.
இலங்கை பந்து வீச்சை சிதறடித்து ரன் சேர்த்தனர். கோஹ்லி மற்றும் ரோகித் சர்மாவை கட்டுப்படுத்த முடியாமல் இலங்கை வீரர்கள் திணறினர்.
தொடர்ந்து அதிரடி காட்டிய கோஹ்லி 78 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார்.
இது அவருக்கு 29வது சதமாகும். இதன் மூலம் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் சச்சின் (49), ரிக்கி பாண்டிங் (30) ஆகியோரை அடுத்து 3வது இடத்தை பிடித்தார்.
131 ரன் எடுத்து நிலையில் மலிங்க பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார்.
Comments